தமிழக செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியது, என் அருகில் இருந்தவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் மனவருத்தத்தில் இல்லை. மனமகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு