தமிழக செய்திகள்

சென்னையில் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்க திட்டம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

சோதனை முறையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் தமிழகத்திற்கு மின்சார பேருந்துகள் வாங்கவும், முதற்கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை வாங்கி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பேக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"தமிழகத்திற்கு புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னைக்கு 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. சோதனை முறையில் இந்த மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது.

இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னை போக்குவரத்துக்கழக பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்