தமிழக செய்திகள்

திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 100 பேர் கைது

திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிமுத்து, அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் முத்துக்குமார், சாத்தான்குளம் சேசுமணி, உடன்குடி கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட 62 ஆண்கள் உள்பட 100 பேர் பங்கேற்றனர். இவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கவுரி மனோகரி ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனார். இந்த போராட்டத்தால் அந்த அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்