தமிழக செய்திகள்

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

கடையம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கடையம்:

கடையம் அருகே மாலிக்நகர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜமால் அப்துல்காதர். இவருடைய மகன் ஷேக் மைதீன் (வயது 30). இவர் சம்பவத்தன்று சிவசைலம் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசைலம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (47), சம்பன்குளம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த அப்பாதுரை (41) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஷேக் மைதீனிடம் தகராறு செய்து, அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, அப்பாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை