தமிழக செய்திகள்

தொழிலாளி கொலையில் மேலும் 2 பேர் கைது

நெல்லை அருகே தொழிலாளி கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பேட்டை:

நெல்லை பேட்டை சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரை சேர்ந்தவர் குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் நெல்லை பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 21-ந் தேதி இரவு வேலைக்கு சென்று கொண்டிருந்த இவரை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். ஒருவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரணடைந்தார்.

இந்நிலையில் நேற்று நடுக்கல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் ஆதி கணேசன் (22) மற்றும் கோடகநல்லூர் கீழ அக்ரஹாரத்தைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கி பாண்டி என்ற சிவா (22) ஆகிய இருவரை பேட்டை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு