தமிழக செய்திகள்

செம்மண் கடத்திய 2 டெம்போ, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கருங்கல் அருகே செம்மண் கடத்திய 2 டெம்போ, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கருங்கல்:

கருங்கல் அருகே செம்மண் கடத்திய 2 டெம்போ, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை ஈச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சபிதா(வயது46). இவருக்கு சொந்தமான நிலம் தேரிவிளை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் மாங்கோடு வண்ணான்விளையைச் சேர்ந்த அந்தோணி தாசன் மகன் சகாயதாஸ் தலைமையில் சிலர் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பரில் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் உதவியுடன் சிலர் டெம்போவில் செம்மண் ஏற்றிக் கொண்டிருப்பதை கண்டனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து செம்மண் கடத்துவதற்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 2 டெம்போக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சகாயதாஸ், மத்திகோடு குமரன்விளையைச் சேர்ந்த ஜாண்ரோஸ் மகன் லிவிங்ஸ்டன் (27), திப்பிரமலை பிலாக்காவிளையைச் சேர்ந்த தேவசகாயம் மகன் ஆஷிஷ் (29), பொக்லைன் எந்திர டிரைவரான சாமியார்மடத்தை சேர்ந்த விக்னேஷ், நிலத்தின் உரிமையாளர் சபிதா ஆகிய 5 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு