கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாள் - தமிழக அரசு அறிவிப்பு

சட்டசபை இயங்குவதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது

தினத்தந்தி

சென்னை,

பிப்ரவரி 27-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டசபையில் 27-ம் தேதி (சனிக்கிழமை) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற அலுவல்கள் நடைபெற உள்ளன. அன்று சட்டசபையின் கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்ளுக்கும் 27-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு