தமிழக செய்திகள்

சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை அருகே உள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் சேவல் சண்டை நடைபெறுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட குளித்தலை அருகே உள்ள அய்யனேரி பகுதியை சேர்ந்த மாணிக்குமார் (வயது 28), ஞானசேகர் (30) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புன்னம்சத்திரம் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஹரிஹரன் (25), மலையப்பன் (26), கவின் (27) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்