தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடசேரி:

நாகாகோவில் வடசேரி போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையம் முன் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தெற்கு சூரங்குடியை சேர்ந்த ரியாஸ் கான் (வயது 24), முகமது ரியாஸ் (23) மற்றும் முகமது அல்தாப் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1.700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இந்த கஞ்சா விற்பனையில் முகமது ஷெரிக் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்