தமிழக செய்திகள்

கார் மோதி 3 பேர் படுகாயம்

கந்தம்பாளையம் அருகே கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கந்தம்பாளையம்

திருச்செங்கோடு குட்டி மேய்க்கன்பட்டியை சேர்ந்தவர் கவுசி சங்கர் (வயது 28) கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி (26). இவர்களுடைய மகள் லிதர்சனா (10). இவர்கள் 3 பேரும் மொபட்டில் இந்துமதியின் தாய் வீட்டிற்கு சிறு கிணத்து பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இந்தநிலையில் கந்தம்பாளையம் அடுத்த குன்னமலை நான்கு ரோடு பிரிவு அருகே சென்றபோது வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது