தமிழக செய்திகள்

4 கிலோ கஞ்சா பறிமுதல்

காட்பாடி ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ரெயில்களில் கடத்தி வரப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், சீனிவாசன் மற்றும், போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் சோதனை நடததினர்.

பின்னர் காட்பாடி ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேக்கை எடுத்து சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்தி வந்தது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு