தமிழக செய்திகள்

குற்ற சம்பவங்களை தடுக்க 4 கண்காணிப்பு கேமராக்கள்

புது உச்சிமேடு கிராமத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 4 கண்காணிப்பு கேமராக்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தில் திருட்டு, வழிப்பறிமற்றும் விபத்து சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து புது உச்சிமேடு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் அங்குள்ள பஸ் நிலையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையொட்டி மேற்படி கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கலந்து கொண்டு 4 கண்காணிப்பு கேமராக்களையும் தொடங்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதில் தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி, ஏட்டு பாஸ்கரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சபாபதி நன்றி கூறினார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்