தமிழக செய்திகள்

216 பெண்கள் உள்பட தமிழகத்தில் 463 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 247 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம் 463 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 247 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம் 463 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 103 பேர், கோவையில் 60 பேர், செங்கல்பட்டில் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை, அவற்றை தவிற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 28 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 111 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 438 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 820 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 277 பேரும், கோவையில் 479 பேரும், செங்கல்பட்டில் 295 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு