தமிழக செய்திகள்

5 பேர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்

பரமக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்காக 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

பரமக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்காக 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

5 பேர் ஆஜர்

இந்நிலையில் 5 பேரும் மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்காக 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் மேற்கண்ட 5 பேர் மீதான விசாரணையை வரும் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சிகாமணி தவிர மற்ற 4 பேரும் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கினை விரைவில் விசாரித்து தீர்ப்பு கூறும் வகையில் வரும் 17-ந் தேதி வழக்கு விசாரணை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு