தமிழக செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பு

பெரம்பலூர்-துறையூர் சாலையில் கல்யாண் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி விஜயா (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆண் நபர் ஒருவர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயா திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அந்த நபர் தாலி சங்கிலியுடன் அருகே தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஆண் நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பெரம்பலூர் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.

பெண்கள் அச்சம்

இந்த சம்பவம் குறித்து விஜயா பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதையடுத்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு