தமிழக செய்திகள்

டயர் வெடித்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; சிறுவன் பலி

டயர் வெடித்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியானான். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 11 பேர் காரில் வந்தனர். திருமணம் முடிந்து மீண்டும் இரவு 10 மணிக்கு திருவள்ளூரில் இருந்து ஆவடி வழியாக குன்றத்தூர் நோக்கி வீட்டுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தனர்.

ராமாபுரம் அருகே சி.டி.எச்.சாலையில் சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மின்கம்பத்தின் மீது மோதியதுடன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

சிறுவன் பலி

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சஞ்சய் (வயது 17) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காருக்குள் இருந்த ஜாக்குலின் (17), ஏஞ்சல் (18), ரம்யா (33), அமிக்கர் மிட்செல் (4), ரம்யா (24), ரித்திகா (22), மோனிகா (25), தஸ்வின் குமார் (17), திவாகர் (27), பூரணி பிரியா (20) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அனைவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ரித்திகா மேல்சிகிச்சைக்காக சென்னை பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்