தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் தகராறு

கோவில் திருவிழாவில் தகராறு செய்த அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூரில் திருவிழா நடைபெற்றபோது இரு தரப்பாரிடையே தகராறு ஏற்பட்டது, அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமராஜ் (வயது 34) என்பவரை, சகோதர்களான திலீப் (21), தினேஷ் (20) ஆகிய இருவரும் கல்லால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த ராமராஜை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து, தினேஷ், திலீப் ஆகியோரை கைது செய்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்