தமிழக செய்திகள்

மாடு முட்டியதில் விவசாயி பலி

கிணத்துக்கடவு அருகே மாடு முட்டியதில் விவசாயி உயிரிழந்தார்.

கிணத்துக்கடவு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓழலப்பதியை அடுத்த குப்பாண்டகவுண்டனூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 68). விவசாயி. இவருக்கு, கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திலயே கிருஷ்ணசாமி குடிசை அமைத்து வசித்து வந்தார். மேலும் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணசாமி தனக்கு சொந்தமான ஒரு மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது திடீரென மாடு அவரை முட்டி தாக்கியது. இதில் வயிற்று பகுதியில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு