தமிழக செய்திகள்

திருத்தணியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

திருத்தணியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியானார்.

திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.சி.எண்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி திருத்தணிக்கு வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு வருவதற்காக காட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முருகன் மீது மோதி விட்டு தப்பி சென்றார்.

இ்ந்த விபத்தில் முருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்த கூலித் தொழிலாளி முருகனுக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு