தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சொகுசு வசதியுடன் கூடிய ஓய்வறை

தமிழ்நாட்டில் அதிகமான பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் அதிகமான பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் நடைமேடை 6-ல் சொகுசு வசதிகளுடன் கூடிய பயணிகள் ஓய்வறை கடந்த 19-ந்தேதி தொடங்கப்பட்டது. இதனை தனியார் நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு ரூ.17 கோடியே 75 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அறை முழுவதும் ஏ.சி. வசதியுடன் விமான நிலையத்திற்கு இணையாக இந்த ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 180 பயணிகள் இருக்கவும், 112 தனிநபர் உட்காரும் இருக்கைகளும், 18 தனிநபர் படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 34 இருக்கைகளுடன் கூடிய உணவருந்தும் வசதியும் உள்ளது. கழிவறை வசதியுடன், குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் ஓய்வு எடுப்பதற்கு ரூ.200 கட்டணமும், 3 மணி நேரம் தனிநபர் படுக்கை வசதிக்கு ரூ.840 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்