தமிழக செய்திகள்

திருவட்டார் அருகேமதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு

திருவட்டார் அருகேமதுவில் விஷம் கலந்து குடித்தவர் இறந்தார்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள மணக்காவிளை வடக்கு விளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 67), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து புலம்பிக்கொண்டு இருப்பார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் செல்லப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்லப்பனின் மகன் சுஜின் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்