தமிழக செய்திகள்

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

களக்காட்டில் காங்கிரஸ் சார்பில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

களக்காடு:

களக்காட்டில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாரத்தான் போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

களக்காடு புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து தாடங்கிய போட்டியானது களக்காடு அண்ணாசிலை, படலையார்குளம், நாகன்குளம், சேரன்மாதேவி ரோடு வழியாக மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தது. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யுமான செல்லக்குமார் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் நரேந்திர தேவ், மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்