தமிழக செய்திகள்

தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

போடியில் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

போடி மின் வாரிய அலுவலகத் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ். கூலித் தொழிலாளி. நேற்று மாலை இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட காளிதாஸ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் சுமார் மணி நேரம் போராடி அங்கு பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது சுமார் 5 அடி நீள சாரைப்பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.  

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

நாளை மத்திய பட்ஜெட் - தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது

சுனேத்ரா, துணை முதல்-மந்திரி ஆகிறார் இன்று பதவி ஏற்க வாய்ப்பு

அஜித்பவாரின் அஸ்தி கரைப்பு