தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தனர். சாலையோரத்தில் குவிந்த கிடந்த ஜல்லிக்கற்களால் இந்த விபத்து நேர்ந்தது.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தனர். சாலையோரத்தில் குவிந்த கிடந்த ஜல்லிக்கற்களால் இந்த விபத்து நேர்ந்தது.

குவிந்த கிடந்த ஜல்லிக்கற்கள்

நாகை மாவட்டம் குருநாதப்புரத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் சுந்தரராஜனுடன் (20) மோட்டார் சைக்கிளில் காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அம்பகரத்தூர்-திருநள்ளாறு சாலையில் கான்பெட் அரசு பெட்ரோல் பங்க் நிலையம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்தினார். அப்போது சாலையோரத்தில் குவிந்து கிடந்த ஜல்லிக்கற்களில் மோட்டார் சைக்கிள் சறுக்கியது.

உடல் நசுங்கி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சூர்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சுந்தரராஜன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஒட்டுனர் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த கேசவனை (26) கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு