தமிழக செய்திகள்

நெல்லைக்கு பஸ்சில் வந்த பெண்ணின் 8 பவுன் நகை மாயம்

கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தினத்தந்தி

      நெல்லை,

ஏர்வாடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 72). இவர் நெல்லை தச்சநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதற்காக ஏர்வாடியில் இருந்து அரசு பஸ்சில் நெல்லை புதிய பஸ்நிலையம் வந்தார். அப்போது அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் மேலப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி மாயமானதா? அல்லது யாரேனும் பறித்து சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு