தமிழக செய்திகள்

காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் - கமல்ஹாசன்

அப்துல் கலாம் பிறந்தநாளான இன்று கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் என பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினமாகும். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் என கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அப்துல் கலாம் நேரிய வழியில் உழைத்து உயர முடியுமென நிரூபித்தவர். அவர் இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர்.

பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம். அவருடைய பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்