தமிழக செய்திகள்

மத்திகிரி அருகே சரக்கு வேன் மோதி வடமாநில தொழிலாளி பலி

மத்திகிரி:

மத்திகிரி அருகே சரக்கு வேன் மோதி வடமாநில தொழிலாளி பலியானார்.

வடமாநில தொழிலாளி

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பூரண் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் ஓசூர் மத்திகிரி அருகே பேளகொண்டப்பள்ளி கப்பக்கல் கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் பூரண் தன்னுடன் வேலை செய்து வந்த நண்பர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலு சகானி (35) என்பவருடன் கப்பக்கல்- உளிவீரன்பபள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

விசாரணை

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் 2 பேர் மீதும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பூரண் சம்பவ இடத்திலேயே பலியானார். லாலு சகானி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்