தமிழக செய்திகள்

திருப்பூர் சப்-கலெக்டராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன் பதவியேற்பு

திருப்பூர் சப்-கலெக்டராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பதவியேற்று கொண்டார்.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார். இவர் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்ற பின் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கூறியதாவது:-

எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும். திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். அவர்களுக்கு எனது நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்