தமிழக செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகிறார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்

#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல  

என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்றுள்ளன.

இதுபற்றி அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! என்றும் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது