தமிழக செய்திகள்

நடிகை மீரா மிதுனுக்கு கோர்ட்டு காவல் நீட்டிப்பு மீண்டும் சிறையில் அடைப்பு

நடிகை மீரா மிதுனுக்கு கோர்ட்டு காவல் நீட்டிப்பு மீண்டும் சிறையில் அடைப்பு.

தினத்தந்தி

சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 14-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் சாம் அபிஷேக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரது ஜாமீன் மனுவும் சென்னை செசன்சு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்களது கோர்ட்டு காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களது கோர்ட்டு காவலை செப்டம்பர் 9-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதையடுத்து இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை