அரசு கல்லூரிகளில் 2021-22-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளின் நலன் கருதி 2021-22-ம் கல்வியாண்டில் தேவையுள்ள கலை பாடப்பிரிவுகளில் 25 சதவீத இடங்களும், அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீத இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டுமென்று கல்லூரி கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.
கல்லூரி கல்வி இயக்குனரின் கருத்துருவை பரிசீலித்த அரசு 2021-22-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ள நிலையில், இக்கல்வி ஆண்டுக்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
கடந்த கல்வியாண்டில் (2020-21) அரசு கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் கூடுதலாக தலா 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.