சென்னை,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் 24ந் தேதி (நேற்று) முதல் 27ந் தேதி வியாழக்கிழமை வரை தினமும் மாலை 3 மணி முதல் 8 மணி வரை சென்னை தியாகராயநகர், சிவஞானம் தெருவில் உள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி, நேற்று கன்னியாகுமரி (மேற்கு பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பகுதி), திருவள்ளூர் (மேற்கு), திருவள்ளூர் (மத்தி) ஆகிய பகுதிகளுக்கான பொறுப்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், மாலை 4 மணி வரை ஒருவர் கூட பொறுப்பாளர் நேர்காணலுக்கு வரவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பேரவை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் தொண்டர்களால் நிரம்பி வழிந்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைமை அலுவலகம் மாவட்ட பொறுப்பாளர் நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நேற்று வெறிச்சோடி காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.