தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதன்படி, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். நாராயணநகர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன், ஆவின் முன்னாள் தலைவர் திவான்பாட்ஷா, கவுன்சிலர் பாஸ்கரன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு