தமிழக செய்திகள்

அ.தி.மு.க. மாநாடு: பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

அ.தி.மு.க. மாநாடு: பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி

திருமங்கலம்,

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் திருமங்கலம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களுக்கு விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் அழைப்பிதழ்களை வழங்கினார். தொடர்ந்து இருசக்கர வாகனத்திற்கும் ஆட்டோவிற்கும் விளம்பர லோகோவை ஒட்டி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகர செயலாளர் விஜயன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன், வழக்கறிஞர் அணி தமிழ்ச்செல்வம், மீனவர் அணி செயலாளர் சவுடார்பட்டி சரவணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர்கள் சதீஷ் சண்முகம், ஜஹாங்கீர், ஒன்றிய குழுத்தலைவர் லதா ஜெகன், முருகன், கவுன்சிலர்கள் செல்வம், ஆண்டிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகுமார், பொன்னமங்கலம் ஜெயமணி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஷ், வாகைகுளம் சிவசக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது