தமிழக செய்திகள்

அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கொட்டாரக்குடியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெரிய கண்ண மங்கலத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் அமைத்தல் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை அமைக்கும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ராதாகிருட்டிணன் கலந்து கொண்டு பேசினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊராட்சிக்கு 50 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது. நாடாளுமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் நடராஜன், பேரவை துணைச்செயலாளர் சரவணன், மகளிரணி இணைச்செயலாளர் சசிகலா மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொறுப்பாளர் வினோத் நன்றி கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு