சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல் அமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உட்கட்சி விவகாரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம், நாடாளுமன்ற தேர்தல், நிர்வாகிகள் நியமனம், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.