கோட்டைப்பட்டினம்:
மீன் வளர்ப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் சார்பாக மீனவ பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், பொன்னகரம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மீன் சார்ந்த தொழில்கள், குறிப்பாக கடல்பாசி வளர்ப்பு, கடல்பாசி மூலம் மதிப்புக்கூட்டிய பொருட்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. மேலும் கூட்டத்தில் மீன் வளர்ப்பு உற்பத்தியாளர் சங்க முதன்மைச் செயலாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு மீனவ பெண்களுக்கு கடல் சார்ந்த சிறு தொழில்கள் குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் மீனவ பெண்கள் கலந்து கொண்டனர்.