தமிழக செய்திகள்

4 மாதங்களுக்கு பிறகு தங்கம் பவுனுக்கு ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

4 மாதங்களுக்கு பிறகு தங்கம் பவுனுக்கு ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை,

தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு இறுதி வரை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்தது. அதன் பிறகு விலை சரியத் தொடங்கியது. அதிரடியாக விலை குறைந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்த வண்ணமே காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 602-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 816-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 652-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 216-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து இருந்தது. கிராமுக்கு 90 காசும், கிலோவுக்கு ரூ.900-ம் அதிகரித்து, ஒரு கிராம் 77 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ ரூ.77 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆனது.


இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்