சென்னை
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை கட்டி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, வால்பாறை சட்டமன்ற தொகுதி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் பரம்பிகுளம் ஆழியாறு திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக கூடுதல் தடுப்பணைகள் கட்டுதல் குறித்த கருத்துக்களுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பான கருத்துருக்கள் கேரள மாநில அரசோடு பேசி ஒப்புதல் பெறப்பட்டபின் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.