கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் குடியிருப்பு பகுதியில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து செய்திருந்தனர். இதனால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டதோடு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கழிவுநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று, வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர். அப்போது கள்ளக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.