தமிழக செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா ; கேக் வெட்டி, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன

சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் தின விழாவில் கேக் வெட்டி, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தனர்.

அவர்களுக்கு மகளிர் அணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முக்கிய பெண் உறுப்பினர்களான கோகுல இந்திரா, வளர்மதி, விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் மேடையில் கேக் வெட்டி கெண்டாடினர். இதன் பின்பு நடந்த சமபந்தி விருந்திலும் அவர்கள் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலருக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு