தமிழக செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் - உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடு..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பெதுக்குழு கூட்டம் நாளை நடைபெறும் உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வந்து உள்ளனர்.

இந்த நிலையில் நாளை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை கட்டாயம் கொண்டு வரவேண்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு