தமிழக செய்திகள்

அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு விடாமல் இருக்கும் வகையில் தேர்தலை முன்னெச்சரிக்கையாக நடத்துவதற்கான சூழலையும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று கூறும்பொழுது, கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதனால், வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது