தமிழக செய்திகள்

சூலூரில் விமானப்படை தினம்

சூலூரில் விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது. இங்குள்ள 5 பி.ஆர்.டி. எனப்படும் பழுது நீக்கும் பணிமனையில் நடைபெற்ற விமானப்படை தினத்திற்கு ஏர் கமோடர் விஷ்ணு கவுர் தலைமை தாங்கினார். அப்போது அவர், விமானப்படையின் விமானங்களையும், உபகரணங்களையும் மறுசீரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகியவற்றில் இந்த பணி மனையின் பங்கு சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இங்கு சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களை அவர் பாராட்டினர்.

தொடர்ந்து அவர் விமானப்படையினரிடம் புத்தாக்கம், மீட்டுருவாக்கம் மற்றும் முழுமையான தற்சார்பு ஆகியவற்றை விமானப்படை ஊக்குவித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் விமானப்படை அதிகாரிகள், வீரர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விமானப்படை அதிகாரி தலைமையில் வீரர்கள் உள்பட அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்