தமிழக செய்திகள்

திருமருகலில், அனைத்துக்கட்சி கூட்டம்

நாளை நடக்கும் முழு கடையடைப்பு குறித்து திருமருகலில், அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

திட்டச்சேரி:

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கர்நாடக அரசை கண்டித்தும் நாளை (புதன்கிழமை) கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றியத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்