தமிழக செய்திகள்

சாலையில் சென்ற மின்சார ஸ்கூட்டர் திடீர் தீ விபத்து

சென்னை கொருக்குப்பேட்டை சாலையில் சென்ற மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தினத்தந்தி

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (வயது 38). இவர் வியாசர்பாடி அடுத்த முல்லை நகர் பகுதியில் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று காலை தனது கம்பெனியில் தனது மின்சார ஸ்கூட்டரில் சார்ஜ் செய்து கோவிலுக்கு சென்று விட்டு முல்லை நகர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவரது மின்சார ஸ்கூட்டரில் இருந்து புகை வருவதை கண்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பார்த்தார். உடனே மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக வந்து தீயை அனைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது