தமிழக செய்திகள்

கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

நஞ்சை புகழூர் ஊராட்சியில் கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், உதவி இயக்குனர் டாக்டர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், சிகிச்சைப் பணிகள், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.மேலும் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்பு குறித்த சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. முகாமில் நன்செய் புகளூர் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது