தமிழக செய்திகள்

அப்போலோ மருத்துவமனை: தயாளு அம்மாள் உடல் நலம் குறித்து விசாரிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வருகை

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். #MKStalin

சென்னை,

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று (செவ்வாய்கிழமை )மாலை வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை வருகை தந்தார். பின்னர் சிகிச்சைகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உரிய சிகிச்சைக்குப்பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்