தமிழக செய்திகள்

மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி (மெட்ரிக்) ஆகும். வயது வரம்பு 1.1.2023 தேதியில் 18 முதல் 25 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும் உண்டு.

மொத்த பணியிடங்கள் தோரயமாக 11 ஆயிரம் (இந்தியா முழுவதும்). இந்த பணியிடத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 17.2.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இந்த போட்டித்தேர்வுக்கு விருப்பமுள்ள போட்டித்தேர்வர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இந்த மாதம் 17-ந்தேதிக்குள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி தொடங்கும் தேதி ஒவ்வொருவருக்கும் செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு