தமிழக செய்திகள்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு,

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத்தொகை பெறப்படாமல் உள்ளவர்கள், தாங்கள் பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள வைப்புத்தொகை பத்திரத்தின் நகல், அவரது பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ் நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எண்ணிக்கை போன்றவற்றுடன் நேரில் சென்று சமூக நல விரிவாக்க அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் பயனாளிகளின் கருத்துரு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்குண்டான முதிர்வுத்தொகை அவரது வங்கி கணக்குக்கு பெற்று வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாதத்தின் 2-வது செவ்வாய் கிழமைகளிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலத்திலும் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18 வயதை கடந்து பயனாளிகள் முதிர்வு தொகை பெறுவதற்கான கருத்துருவினை சமர்பிக்க பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்